திருவாரூர், ஜூலை. 07 –

தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி திருவாரூரில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் இன்று நடைப்பெற்றது.

இன்று திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் மதிமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் இன்று அந்நகரம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து வாங்கிடும் வகையில் இரயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைப்பெற்றது.

இதில், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன. மேலும் இக்கையெழுத்து இயக்கப் போராட்டம் மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இதில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஸ்ரீதர் (நாகை), பாலச்சந்திரன் (திருவாரூர்), தலைமை  செயற்குழு உறுப்பினர் ஆரூர் சீனிவாசன், நகரச் செயலாளர் ஏ.கே.எம். கபிலன், ஒன்றியச் செயலாளர் டி.ஆர். தமிழ்வாணன், திமுக ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ. தேவா, நகர்மன்றத் தலைவர் புவனபிரியா செந்தில், மாவட்டச் செயலாளர்கள் வை. செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மா. வடிவழகன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), முஜிபுர் ரஹ்மான் (தமுமுக), மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று கையெழுத்து இயக்கப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here