ராமநாதபுரம், ஆக. 19-

ராமநாதபுரத்தில் அன்னை கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் மற்றும் இந்திய மருத்தவ சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 15 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையை இலவசமாக அன்னை கண் மருத்துவமனை செய்தது

ராமநாதபுரம் அன்னை கண் மருத்துவ மனையில் ரோட்டரி கிளப் ஆப் ராமநாதபுரம், அன்னை கண் மருத்துவமனை, இந்திய மருத்தவ சங்கம் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இந்த முகாமில் கண் சிறப்பு டாக்டர்கள் சந்திரசேகரன், ரஞ்சன் ஆகியோர் 150க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த முகாமில் கண் அழுத்தம், விழித்திரை, கண்புரை அறுவைசிகிச்சை போன்ற கண் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. முகாமில் பரிசோதனை செய்தவர்களில் 15 பேர் கண்புரை ஆப்ரேஷனுக்கு பரிந்துரைக்கப் பட்டு அவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சையை அன்னை கண் மருத்துவ மனையில் மேற் கொள்ளப்பட்டது. முகாமில் முன்னாள் துணை கலெக்டர் சேதுராமன்  முகாமை தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கண் சிறப்பு டாக்டரும் மூத்த ரோட்டரி சங்க உறுப்பினருமான டாக்டர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here