குடவாசல், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது.. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ், சட்ட மன்ற கூட்ட தொடரில் குடவாசல் கோனேஸ்வரர் கோயிலுக்கு தேர் வேண்டும் என கோரிக்கை வைத்த்தாகவும், அதற்காக ரூ. 30 லட்சம் ரூபாய் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரால் அறிவிக்கப்பட்டதாகவும், பிறகு ஆட்சி மாற்றம் நடைபெற்று திமுக அரசு தேர் திருப்பணிக்கான தொகயை ரூ.17 லட்சமாக குறைத்து அறிவித்ததாகவும், அதனால் தேர் அச்சு உள்ளிட்ட நான்கு தேர் சக்கரங்கள் மட்டுமே செய்து வைத்துள்ள நிலையில் அப்பணி முடங்கி போய்வுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் கடந்த மூன்று வருடங்களாக தேர் திருப்பணியை தொடராமல்.. வருடம் 12000 ரூபாய் வாடகையில், பொது மக்களுக்கு இடையூறாக.. பொது வழியை மறைத்து கூரை கொட்டகையில் தேர் திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது மேலும் அவர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
மேலும் நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நிதி அளிக்க முன் வந்தும் கோவில் நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கை கடைப் பிடிக்கின்றனர் என குடவாசல் பகுதி மக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் அத்திருத்தேர் திருப்பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டும் காணாமல் கோவில் நிர்வாகம் அலட்சிய படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் , கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதோஷ நாளன்று கோவில் மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில்,
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர் மேலும் கோவில் நிர்வாக அதிகாரி வெளியூரில் இருந்து வருவதால் கோவிலிலேயே தங்குவது கிடையாது என்றும், அலட்சியப் படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் கோவில் திருப்பணியையும், தேரையும் உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் அக் கோயிலுக்கு பல கோடி அளவிலான சொத்துக்கள் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும் அரசின் பாராமுகத்தாலும் பாலடைந்து வருவதாக மேலும்அவர்களின்மனவேதனையை தெரிவித்தனர்.
பேட்டி: 1. சிங்காரவேலன் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் குடவாசல். 2.சாமிநாதன் நகர செயலாளர் அதிமுக குடவாசல்