காஞ்சிபுரம், பிப். 7 –

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம்  இன்று மாலை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை காஞ்சிபுரம் வருகை தரவுள்ளார்.

இதற்காக காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையின் இரு புறமும் அதிமுக கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது

தேர்தல் விதிமுறைகளை மீறி காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களை காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள்  தற்போது போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அகற்றி வருகின்றனர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரைக்காக காஞ்சிபுரம் வருகை தர ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக அதிமுக கொடி கம்பங்கள், பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here