புதுச்சேரி, ஏப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது வயல்வெளியில் கூலி வேலைக்கு செல்வது வழக்கமாகும். இருவரும் தமிழக அரசு மூலம் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் முதியோர் பென்ஷன் பெற்று வருகிறேர்களா என்று கேட்டுள்ளார். மூதாட்டியும் அதற்கு ஆமாம் என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.

இந் நிலையில், உங்களுக்கும் உங்க கணவருக்கும் தபால் நிலையம் மூலம் ரூ.8 ஆயிரம் வந்துள்ளதாகவும் அதனை பெற  ரூ. 2750 கட்ட வேண்டும், அதுவும் உடனேயே கட்டினால்தான் கிடைக்கும் இல்லையென்றால் திரும்பி மத்திய அரசுக்கே அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளார்.

சுமார் 50 வயதுடைய அவர்  நோட்டு புத்தகம் மற்றும் பேங்க் செலான் ஆகியவைகளை வைத்துக் கொண்டு போனில் சார் சொல்லுங்க சார் 28 பேருக்கு கொடுத்தாச்சு சார் இன்னும் இரண்டு பேருதான் பாக்கி இதோ அவங்கக் கிட்ட இருந்துதான் பேசிக்கிட்டு இருக்கே சார் இதோ உடனே அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அங்குமிங்குமாக நடந்து கொண்டே இருந்துள்ளார்.

சார் இப்ப என்னிடம் பணம் இல்லை, நான் வாங்கிய பிறகு உங்களுக்கு தருகிறேன் என்று அந்த அம்மையார் கூறினார், யாரிடமாவது கடன் வாங்கி கொடுங்கள் அதான் 8 ஆயிரம் வருதே என்று கூறியதால் அருகில் இருந்தவர்கள் சிலரிடம் கடன் வாங்கி ரூ.2750 கட்டியவுடன் இந்தியன் வங்கி செலானில் ரூ.8 ஆயிரம் எனவும் கணக்காளர் கையெழுத்திடும் இடத்தில் 1000 எனவும் அவர் இஸ்ட்டம் போல் ஒரு கணக்கு நம்பரை அவசர-அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு நீங்கள் சீக்கிரம் ரேஷன் கடைக்கு சென்று பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று உள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்று பார்த்து ஏமாந்த அந்த மூதாட்டி அந்த வங்கி செலானை சிலரிடம் கான்பித்த பிறகுதான் தெரிந்தது, தான் ஏமாந்தது. நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் போஸ்ட்மேனிடம் வேறு ஒருவருக்கு வந்த முதியோர் பென்ஷனை தனக்கு வந்ததாக கூறி வாங்கிக் கொள்வார், அதுபோல் அந்த அம்மையாரிடம் மர்ம ஆசாமி பணம் பறித்து சென்றது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here