அம்பத்தூர், டிச. 06 –

சென்னை அம்பத்தூரில் இன்று பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை மத பயங்கரவாத எதிர்ப்பு நாளாக குறிப்பிட்டு  தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.அப்துல் காதர் மற்றும் குன்னக்குடி ஹனிபா ஆகியோர் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைப் போன்று தமிழ்நாட்டில் 47 இடங்களில் நடைபெற்று வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்திய அவர்கள் இந்திய நாட்டின் புகழ்மிக்க வரலாற்று சின்னமாக 450 ஆண்டு காலம் அயோத்தியில் இருந்த ஏக இறை ஆலயம் பாபாரி மஸ்ஜிதை சங்பரிவார மதவெறியினர் டிசம்பர் 6.  1992 இல் இடித்து தரமட்டமாக்கியதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு நாடறிய இந்த மத பயங்கரவாதச் செயல் பட்டப்பகலில் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டது எனவும் அதனால் அப்போது ஆறு மாநிலங்களில் ஆட்சிப் பொருப்பில் இருந்த பாஜக அரசு கலைக்கப்பட்டது எனவும் அப்போது தெரிவித்தனர்.

மேலும், இந்திய அரசியல் சாசன சட்டம் என்பது இந்திய குடிமக்களுக்கான உரிமைகளை அனைவருக்கும் சமமாகவே தந்துள்ளது. எனவும் அதில் வழிபாட்டு உரிமை என்பது தலையானதாகும். வழிபாட்டுரிமையை சிறுபான்மை மக்களிடம் இருந்து அடியோடு பறிக்க திட்டமிடும் நோக்கத்தோடு, பாசிஸ்டுகள் இப்போது முன் எப்போதும் இல்லாத வகையில் மும்முரமாகவும், அதிகப்பட்ச கோபத்துடனும், களமிறங்கி உள்ளனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒன்றியத்தில் பாஜக எனும் சங்க்பரிவார் அரசு இருப்பதே இதற்கு காரணம் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் என திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிப்பாட்டு பாதுகாப்பு உரிமை முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here