பொன்னேரி, செப். 17 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பொன்னேரி சட்மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்வந்வருமான துரை சந்திரசேகர் ஹரிஹரன் பஜார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ரஃபேலா ஹோமியோபதி கிளினிக்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு பிஷப் விமல்ராஜ் முன்னிலை வகிக்க கிளினிக் மருத்துவர் வர்ஷினி தலைமையேற்றார். தொடர்ந்து நிகழ்வில் அப்பகுதி வாழ் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விழாவினை சிறப்படைய செய்தனர்.