கும்பகோணம், ஏப். 09 –
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட 2000 நபர்களுக்கு கண்ணாடி வழங்கும் முகாம் ரோட்டரி சங்க தலைவர் கோபிதாஸ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சாயிநாதன் வட்டார மருத்துவ அலுவலர் கலாராணி ரோட்டரி சங்க செயலாளர் சாம்பியன் ராஜா மாநகர துணை மேயர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சாம்சன் தெரிவிக்கையில் கும்பகோணத்தை சுற்றி 54 கிராமங்கள் உள்ளன இதில் 25 கிராமங்களை தேர்ந்தெடுத்து கடந்த ஜூலை மாதம் தொடங்கி 40 வயதுக்கு மேற்பட்ட கண்பார்வை குறைபாடு உள்ள 6000 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனைப்படி 2000 நபர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 59 அரசு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 15165 மாணவ மாணவிகளுக்கு மருத்துவரைக் கொண்டு கண் பரிசோதனை செய்யப்பட்டு 3187 மாணவ மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூபாய் 25 லட்சத்துக்கு மேல் 5187 கண்ணாடிகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார். தமிழகத்திலேயே கும்பகோணம் ஒன்றியத்தில் மட்டும்தான் அதிக நபருக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கப்பட்டது மற்ற பகுதிகளில் 10% கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















