மீஞ்சூர், மார்ச். 26 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார் .இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர். வழக்கறிஞர் எம்.ஜைனுல்ஆபிதீன் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுத்தப்படும் செயல்கள் மற்றும் பாதிப்புகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்து விளக்கமாக பேசினார். .
அவருடன் மாபாஷா. இனியாஸ். நாகூர்கனி .யூசுப்அலி. உள்ளிட்ட மீஞ்சூர் ஆரியன் வாயில் பகுதி தமுமுக கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஷயின்ஷா நன்றி தெரிவித்தார்.
























