கும்பகோணம், டிச. 20 –

கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றானதும், மகாமக குளத்தின் கிழக்கு கரையில், மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும்,  அபிமுகேசுவரசுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு திரவிய பொடி மாப்பொடி மஞ்சள் பொடி பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பலவிதமான வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து புனிதநீர் நிரம்பிய கடநீரை கொண்டு கட அபிஷேகமும் நடைபெற்றது.  பின்பு சிறப்பு அலங்காரத்தில் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here